கிராமத்தில் திருக்கார்த்திகை திருநாள்|| Karthigai Celebrations In Rural Tamil Nadu lord Brahma mandir me



தமிழ்க் கடவுளின் சிறப்பைப்
போற்றும் கார்த்திகை தீபம்

தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது.

கார்த்திகை திருநாள் கார்த்திகை மாதம் கிருத்திகா நட்சத்திரத்தில் கார்த்திகை கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை திருநாளன்று வீடுகள் தோறும் அகல் விளக்கால் அலங்கரிக்கப்படும். இந்த நாளன்று நெல் பொரியும், அவல் பொரியும் வெல்லப்பாகிலிட்டு பரம்பொருளான சிவ பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கம்.

கார்த்திகை திருநாள் திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களில் நெருப்புக்குரிய தலமாக திகழ்வது திருவண்ணாமலை. கார்த்திகை தினத்தன்று தமிழகத்தின் வீடுகள் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். எங்கெங்கு காணினும் விளக்குதான். விளக்கின் ஒளி புற இருளை போக்கும். ஈசனின் நினைவு அக இருளைப் போக்கும். கார்த்திகை தினத்தன்று மாலை அகல் விளக்குகளுக்கு குங்குமப் பொட்டு வைக்கப்பட்டு, அதில் எண்ணெய் ஊற்றி,பஞ்சாலோ, திரியாலோ ஆன திரியைப் போட்டு பூஜை செய்து, விளக்கு ஏற்றப்பட்டு வீட்டின் அறைகளிலும், ஜன்னல்களிலும், வாசலிலும் ஏற்றி வைக்கப்படும். அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் கண் கொள்ளா காட்சியாக இருக்கும். இரவை பகலாக்கும் இந்த தீபத் திருநாள் 3 நாள் கொண்டாடுப்படுகிறது.

எண்ணெய் கரைகிறது, திரி கருகுகிறது. ஆம்… தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர் நலம் பேணுவதற்காக தான் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை தீபத் தத்துவம்.

திருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.

தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.

•ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்.

•இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்.

•மூன்று முகம் ஏற்றினால் – புத்திர தோஷம் நீங்கும்.

•நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்.

•ஐந்து முகம் ஏற்றினால் – சகல நன்மைகளும் உண்டாகும்.

இத்தனை சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி… வாழ்வில் வளம் பெறுவோமாக!

Story Behind Karthigai Deepam
Most Hindu festivals celebrate the triumph of light over darkness. Karthigai Deepam is one of such significant festivals that is celebrated in Tamil Nadu, Sri Lanka, Malaysia and Singapore.

Karthigai Deepam falls on the full moon day (Pournami) in the month of Karthigai (Tamil calendar) and Tamilians light up earthen lamps in the evening once the sun sets. It’s even known as the festival of lamps.

According to early Hindu scriptures, Lord Brahma and Vishnu had a feud on who’s more powerful and superior. Their argument to prove who’s better led to a fight and they were both neglecting their responsibilities.

In order to stop the dispute, Lord Shiva appeared in the form of a fire challenged them to find either the top or bottom of the fire to be deemed as the greatest.

Immediately, Lord Brahma took the form of a bird and started to fly up to find the top while Lord Vishnu assumed the appearance of a boar and dug deep to find the bottom. Both their efforts proved to be futile, as Lord Shiva (fire) continued to grow in size. In the end, they gave up and admitted Lord Shiva’s supremacy.
The day this incident took place was on the full moon of Karthigai month and later it’s believed that Lord Shiva appeared as a hill at Thiruvannamalai, Tamilnadu. Till today, the Shivan temple in Thiruvannamalai holds grand Karthigai Deepam celebration.

Source Mandir me

Leave a Reply

sakarya escort bayan bayan Eskişehir escort